Homeசெய்திகள்தமிழ்நாடுசனதானத்தின் கருத்துக்கு எதிரானது தான் திராவிடம்- திருமாவளவன்

சனதானத்தின் கருத்துக்கு எதிரானது தான் திராவிடம்- திருமாவளவன்

-

சனதானத்தின் கருத்துக்கு எதிரானது தான் திராவிடம்- திருமாவளவன்

சமஸ்கிருத மொழிக்கு தனி நிலப்பரப்பு இல்லாததால் பாரதம் என பெயர் மாற்றி நாடு முழுவதும் தனதாக மாற்ற பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அனைத்து கல்வி நிலையங்களிலும் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் – திருமாவளவன் கோரிக்கை

தந்தை பெரியார் 145 வது பிறந்தநாளையொட்டி திராவிட விடுதலை கழகம் சார்பில்
எது திராவிடம் எது சனாதனம் என்னும் தலைப்பில் பொதுக்கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது. சென்னை இராயப்பேட்டையில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் பேசிய தொல் .திருமாவளவன், “திராவிடம் குறித்தும் பலர் குழப்பங்களை எழுப்பி வருகின்றனர். சனதானத்தின் கருத்துக்கு எதிரானது தான் திராவிடம். சமூக நீதிக்கான,சுதந்திரத்திற்க்கான திராவிடம் என்ற சொல்லை கருத்தியலாக பொருத்தி பார்ப்பது தான் சரியாக இருக்கும். தமிழ் தேசியத்தின் எதிரியாக இந்தி தேசியமாக தான் இருக்க முடியுமே தவிர, திராவிட மாநிலங்களை எதிரிகளாக பார்ப்பது திசை மாற்றும் வேலை.

உயர்வு தாழ்வு, தீண்டாமை,குலத்தொழில், மற்றும் அகமணமுறை உள்ளிட்டவைகள் சனதானத்தில் என்றும் மாறாதது. சாதி மாறி திருமணம் செய்தால் கொலை செய்யலாம் என்பது தான் மனுதர்மம். சனதானத்தை எதிர்த்து போர்கொடி தூக்கியதது தான் திராவிடம், மகாபாரதம்,இராமயணம் கதைகள் மூலமாக குல தர்மத்தை மீறினால் தண்டனை கிடைக்கும் என்பதை கதைகளை பாமரன் மத்தியிலும் சனதானத்தை கொண்டு சேர்த்து இருக்கிறது. சனதான தர்மம் அரசியல் அமைப்பு சட்டமாக இயங்குகிறது. சமஸ்கிருதத்திற்க்கு தனி நிலப்பரப்பு இல்லாததால் பாரதம் என பெயர் மாற்றி நாடு முழுவதும் தனதாக மாற்ற முயற்சிக்கிறது” எனக் கூறினார்

MUST READ