Homeசெய்திகள்தமிழ்நாடுதிருத்தணி அருகே பயங்கரம்: புளியமரத்தில் பைக் மோதி அண்ணன், தம்பி உட்பட இருவர் பலி!

திருத்தணி அருகே பயங்கரம்: புளியமரத்தில் பைக் மோதி அண்ணன், தம்பி உட்பட இருவர் பலி!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் புளியமரத்தில் மோதிய கோர விபத்தில், அண்ணன்-தம்பி உட்பட இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருத்தணி
இந்தச் விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை ஒன்றியம் நரசம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (23). இவர் இன்று காலை 10:30 மணியளவில், தனது தம்பி தேவராஜ் (18) மற்றும் நண்பர் மதன் (20) ஆகிய இருவரையும் தனது பல்சர் இருசக்கர வாகனத்தில் (நம்பர் பிளேட் இல்லாத வாகனம்) ஏற்றிக்கொண்டு ஆர்.கே.பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

we-r-hiring

வாகனம் ஆர்.கே.பேட்டை எல்லைக்குட்பட்ட ராஜா நகரம் ஏரிக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஜெகதீசனின் கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகமாகச் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இருவர் சம்பவ இடத்திலேயே பலி
​இந்த அதிவேக மோதலில், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த தம்பி தேவராஜ் மற்றும் நண்பர் மதன் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பைக்கை ஓட்டி வந்த ஜெகதீசன் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

போலீசார் விசாரணை
​விபத்து குறித்துத் தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
​இளைஞர்கள் இருவர் பைக் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

MUST READ