மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்திற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
தளபதி லுக்கில் தெறிக்கவிடும் ரஜினி…..’தலைவர் 171′ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளாக இன்று (பிப்.13) காலை 10.00 கூடியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டத்தொடரில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தொடரில் சபாநாயகர் அப்பாவு, மறைந்த தலைவர்கள், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க. நிறுவன தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதேபோல், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கு.க.செல்வம், துரை ராமசாமி, தங்கவேல் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கட்ராமனுக்கும் பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, மருத்துவர் பத்ரிநாத் உள்ளிட்டோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
வாய் பேச முடியாதவராக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்…. ‘சைரன்’ பட கதை இதுவா?
சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசிக்க, அவையில் இருந்த உறுப்பினர்கள் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலியை செலுத்தினர்.