Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர்ந்து குறைந்து வரும் ஆபரண தங்கத்தின் விலை - இன்றைய விலை என்ன தெரியுமா?

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய விலை என்ன தெரியுமா?

-

- Advertisement -

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் தங்கம் விலையானது முந்தைய நாள் விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு சவரன் ரூ.54,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தங்கம் விலையானது சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,810-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.96-க்கும் பார் வெள்ளி ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

 

MUST READ