spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு - இல்லத்தரசிகள் கவலை!

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு – இல்லத்தரசிகள் கவலை!

-

- Advertisement -

தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.49,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த வாரம் வெள்ளி கிழமை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.49,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.49,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ6,185-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விலை உயர்வு

இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.49,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,205க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

MUST READ