spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

-

- Advertisement -

ஆவடி பட்டாபிராம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (20.07.2024) காலை 0830 மணியளவில் ஒரிசா கடற்கரையை ஒட்டிய சில்கா ஏரி அருகில் நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரிசா மற்றும் சத்திஸ்கர் அருகில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றுழத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 20.07.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை....மக்களுக்கு உதவ பா.ஜ.க. தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

21.07.2024 முதல் 26.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

MUST READ