Homeசெய்திகள்தமிழ்நாடுஓபிஎஸ் நடத்தும் மாநாட்டில் பங்கேற்பா? டிடிவி தினகரன் விளக்கம்

ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டில் பங்கேற்பா? டிடிவி தினகரன் விளக்கம்

-

ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டில் பங்கேற்பா? டிடிவி தினகரன் விளக்கம்

டெல்டா பகுதி மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையே தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அமல்படுத்த கூடாது அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்வதாக அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், “மத்திய அரசு நிலக்கரிக்கான ஆய்வை செய்ய மாட்டோம் என கூறியிருக்கிறார்கள் அதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் வருங்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது. விவசாயம் சார்ந்த, சுற்றுச்சூழலை, இயற்கையை பாதிக்காத திட்டத்தை தான் கொண்டுவர வேண்டும் என்பதே டெல்டா பகுதி மக்களின் கோரிக்கை அதுதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிலைப்பாடும் அதுதான்.

மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம். மேலும் இத்திட்டத்தை இங்கு செயல்படுத்தினால் அ.மு.மு.க சார்பில் அந்த பகுதி மக்கள் விவசாயிகளோடு இணைந்து அந்த முயற்சியை கைவிடும் வரை தொடர் போராட்டம் நடைபெறும். ஓ.பி.எஸ்.வரும் 24-ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்த உள்ளார். அம்மாநாட்டிற்கு என்னையும், சசிகலாவையும் அழைக்க இருப்பதாக கூறியிருக்கிறார். இன்னும் 14 நாட்கள் இருக்கிறது, பார்ப்போம்” என்றார்

MUST READ