கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் நிறுவன வாகனம் மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார் . கட்டிட தொழிலாளி ஆன இவரது மனைவி கலாவதி,
போடிச்சிபள்ளி ஊராட்சி மன்ற கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், குமார், அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவருடன் நேற்றிரவு கெலமங்கலத்தில் இருந்து போடிச்சப்பள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

கெலமங்கலம் கூட்ரோடு வழியாக சென்றபோது, குமார் இருசக்கர வாகனத்தின் மீது ஓசூரில் இருந்து வந்த தனியார் நிறுவனம் வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இதில், குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த கணேஷை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழீயிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் திரண்ட கிராம மக்கள் விபத்தை ஏற்படுத்திய தனியார் நிறுவன வாகனததையும், அந்நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் சப்-கலெ க்டர்
பிரியங்கா, மாவட்ட எஸ்.பி-தங்கதுரை ஆகியோர் கிராம மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது