அரசியல் சட்டத்தைக் காப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம் – உதயநிதி ஸ்டாலின்

Published by
raj
Share

அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நாளில் அரசியல் சட்டத்தைக் காப்போம் என்று உறுதி ஏற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஏழை – எளிய – ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது பேரறிவைப் பயன்படுத்திய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவர் உருவாக்கிக் கொடுத்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தான் பாசிசத்தை எதிர்த்து போரிட நம் கையில் இன்றைக்கும் இருக்கும் போர்க்கருவி.

அந்த அரசியல் சட்டத்தை உருக்குலைக்க நினைக்கும் மக்கள் விரோத சக்திகளை மொத்தமாக விரட்டும் மாபெரும் ஜனநாயகக் கடமை நமக்கு இருக்கிறது. அண்ணலின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த நமது முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 40 தொகுதிகளிலும் வெல்வோம், அரசியல் சட்டத்தைக் காப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம்.வாழ்க அண்ணல் அம்பேத்கர் என குறிப்பிட்டுள்ளார்.

Show comments
Published by
raj
Tags: DMK minister Udhayanidhi Stalin உதயநிதி