spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒரே வாரத்தில் இரண்டு துணை ஆணையர்கள் பொறுப்பிலிருந்து விடுவிப்பு..சென்னை காவல் ஆணையர் அதிரடி

ஒரே வாரத்தில் இரண்டு துணை ஆணையர்கள் பொறுப்பிலிருந்து விடுவிப்பு..சென்னை காவல் ஆணையர் அதிரடி

-

- Advertisement -

துணை ஆணையர் அலுவலகத்தில் பெண் வாக்குவாதம்; கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளாா்.ஒரே வாரத்தில் இரண்டு துணை ஆணையர்கள் பொறுப்பிலிருந்து விடுவிப்பு..சென்னை கோயம்பேடு காவல் துணை ஆணையராக பொறுப்பு வகித்த அதிவீர பாண்டியன் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலகத்திற்கு மாற்றி காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதில் கோயம்பேடு துணை ஆணையராக சுஜித் குமார் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

காதல் விவகாரத்தில்  இரு தரப்பு குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்த நிலையில், இது தொடர்பான புகார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அந்த பிரச்சனையில் பெண்ணின் புகைப்படத்தை எதிர்வீட்டார் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் இது தொடர்பாக கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டு, துணை ஆணையர் அதிவீரபாண்டியன் குறித்தும் குற்றஞ்சாட்டி  பிரச்சனை செய்தார்.

we-r-hiring

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமலா பால் மேலாளர் தற்கொலை வழக்கு சர்ச்சையாகி கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஒரே வாரத்தில் சென்னையில் இரண்டு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கராத்தே போட்டியையும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் – மாணவிகள் கோரிக்கை

MUST READ