”தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்து மற்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பது போல் கராத்தே போட்டியையும் பெண்களுக்கு என்று தனி கவனம் செலுத்தி ஊக்குவித்து ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வேப்பம்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் ஆலன் திலக் கராத்தே பள்ளியின் ஐந்தாம் ஆண்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாகபோட்டி நடைபெற்றது. இப் போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக CRPR.DIG அருள்குமார் IPS.அவர்கள் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழும்வழங்கினார். இந்தப் போட்டியில் திருவள்ளூர் கிழக்குமாவட்டத்தை சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கராத்தே பயிற்சியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் சான்றுகளும் வழங்கி கௌரப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் 300 மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர். இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் பொன்னேரியில் நடைபெற உள்ள திருவள்ளூர் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள் குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணவிகள், ”தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்து மற்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பது போல் கராத்தே போட்டியையும் பெண்களுக்கு என்று தனி கவனம் செலுத்தி ஊக்குவித்து ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இப்போட்டியில் திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்க தொழில்நுட்ப இயக்குனர் திரு விஜயராகவன், செயலாளர் தட்சிணாமூர்த்தி துணைச் செயலாளர்கள் ரமேஷ் குமார் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரயில்வே துறையை தனி பட்ஜெட்டுக்கு மாற்றப்பட வேண்டும்-இராமதாஸ் கோரிக்கை