spot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிடயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை - நடிகர் சத்தியராஜ்

டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்

-

- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் நாகராஜ் தலைமையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை - நடிகர் சத்தியராஜ்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் நாகராஜ் தலைமையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக பொருளாளருமான ஆ.ராசா, திரைப்பட நடிகர் சத்தியராஜ், திக பிரச்சார செயலாளர் அருள்மொழி ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டலகுழு தலைவர் பி.கே. மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொது மக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

we-r-hiring

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசும்போது, “மிசா காலத்தில் திமுகவிற்கு நடைபெற்ற கொடுமையை உலகம் அறிவதற்காக மட்டுமல்ல இன்றைக்கு உள்ள புதிய காங்கிரஸ் தலைவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்குப் பின் ஏன் கூட்டணி வைத்தோம் என கேட்கிறார்களே அதற்கும் விளக்கம் சொல்ல வேண்டும். அன்றைக்கு ஏன் காங்கிரஸை எதிர்த்தோம் இன்றைக்கு ஏன் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றால் எங்களுக்கு ஒரு அடையாளம் உள்ளது. இந்த வேறுபட்ட அடையாளங்கள் ஒரே இடத்தில் இருந்து எப்படி அரசியல் சட்டத்தை காப்பாற்றுகிறது அங்கே ஒரு அடையாளம் இந்த மூன்று அடையாளமும் ஓரிடத்தில் சங்கமிக்கும் புள்ளிதான் தமிழ்நாடு என பேசி இருந்தேன்.டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை - நடிகர் சத்தியராஜ்இது காங்கிரஸ்காரர்களுக்கு புரியவில்லை பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து வெளியில் வந்து என்னிடம் இப்படி எல்லாம் நடந்ததா என கேள்வி எழுப்பினார். அதற்கும் பதில் அளித்தேன். மிசாவிற்கு பின் ஏன் காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணி வைத்தீர்கள் என கேட்கிறார்கள் அதற்கும் பதில் சொல்ல உள்ளேன். இந்த தவறுகளுக்கெல்லாம் இந்திரா காந்தி தான் என நேரடியாக என கூற முடியாது. அவர் கொண்டு வந்த சட்டத்தை இங்கு உள்ள அதிகாரி செய்தார். இந்த கொடுமைகள் எல்லாம் செய்த நேரத்தில் மீண்டும் எங்களுடன் கூட்டணி அறிவித்து  சென்னையில் நடைப்பெற்ற கூட்டத்தில் நடந்த தவறுகளுக்கு எல்லாம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தது அதை எல்லாம் ஒப்புக்கொண்டு நடந்ததற்காக நான் வருந்துகிறேன் மன்னிப்பு கேட்கிறேன் என கூறினார்.  நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் வரை பாபர் மசூதியும் இடிக்கவில்லை. பொது சிவில் சட்டமும் கொண்டு வரவில்லை காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கவில்லை. நாங்கள் இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் வெளியில் வந்தவுடன் அனைத்து பிரச்சினைகளும் வந்துவிட்டது. பெரியார் அண்ணா இருந்தபோது ஆபத்து இல்லாமல் இருந்தது.

ஆனால் இன்று நாடாளுமன்றத்தில் 400க்கு மேல் உறுப்பினர்களுடன் தலைவிரித்து ஆடுகிறார்கள் நமது கொள்கையை காப்பாற்றுகின்ற மகத்துவ மகத்துவமிக்க தலைவரை தமிழ்நாடு பெற்றுள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கூறினார்.டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை - நடிகர் சத்தியராஜ்தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் பேசுகையில், “டயலாக் பேசுவது வேறு மேடை அதே போல் கண்டன்ட் எதுவும் இல்லாமல் பேசுவார்கள் ஈசியாக கைத்தட்டல் கூட வாங்கிக் கொள்ளலாம் இதெல்லாம் வெட்டி உதாரணம் இதை எல்லா நடிகர்களுக்கும் செய்யத் தெரியும். உண்மையான கொள்கையை பேசும் திமுக மேடை. என்னம்மா கண்ணு என்ற டயலாக் பேசினால் அறிவு வளராது ஜாலியாக பேசலாம். அந்த காலத்தில் இருந்து தற்போது வரை நடக்கிறது.நடிகர்கள் எது பேசினாலும் கைதட்டுவார்கள். நான் எம்ஜிஆர் தீவிர ரசிகனாக இருக்கும் நான் திமுக மேடையில் இருக்க காரணம் சித்தாந்தம் தான். ஒரு அமைப்பை எம்ஜிஆர் எவ்வளவு வெறுத்தார் என அந்த வீடியோவில் உள்ளது தேர்தல் நேரத்தில் காட்டுவேன். சினிமா பார்ப்பார்கள் வேடிக்கை பார்ப்பார்கள் சினிமா நடிகர்களை பார்க்க கூட்டம் வரும் கைதட்டுவார்கள் ஆனால் நம்முடைய குடும்பம் ஐந்து வருடங்களுக்கு முன்பாக எப்படி இருந்தது தற்பொழுது எப்படி உள்ளது என ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமக்களுடைய மனசாட்சிக்கு தெரியும்.  இந்தாண்டு நடைப்பெறுவது தேர்தல் போட்டி அல்ல இந்த தேர்தலில் சமூக நீதிக்கும் சனாதனத்துக்கும் நடக்கும் போட்டி. தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்றுவதற்கான சகுனி தனம் செய்கின்றனர். அது தான் திருப்பரங்குன்றத்தில் நடந்தது” என நடிகர் சத்தியராஜ் கூறினார்.

காமெனி படுகொலையில் நடந்தது இதுதான்! களமிறங்கும் சீனா – ரஷ்யா! பொன்ராஜ் நேர்காணல்!

MUST READ