ஆவடி அருகே சாலையோரம் கார் மீது அரசு போருந்து மோதி, சாலையோரத்தில் இருந்த மின்சார கம்பம் உடைந்து வாகனங்கள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்குன்றத்திலிருந்து சபரிமலைக்கு காரில் ஐயப்ப சாமி குழுவினர் 5 பேர் புறப்பட்டு உள்ளனர். திருமுல்லைவாயலில் காரை சாலை ஓரம் நிறுத்திவிட்டு மாலையை கட்டிய போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியது. இதில் ஐயப்ப சாமி குழுவினர் சென்ற கார் முன்னே சென்று மற்றொரு காருடன் மோதி அப்பளம் போல் நெருங்கியது. விபத்தில் இரண்டு கார்கள், அரசு பேருந்து, ஒரு இருசக்கர வாகனம் சேதமடைந்த நிலையில், சாலையோரம் இருந்த மின்சார கம்பமும் உடைந்து வாகனங்கள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து போலீசார் மற்றும் திருமுல்லைவாயல் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் காரில் இருந்த இருவர் பலத்த காயமடைந்த நிலையில் பேருந்து பயணிகள் ஓட்டுநர், இருசக்கர வாகன ஓட்டி உள்ளிட்டோர் லேசான காயத்துடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினர்.
மதநல்லிணக்கத்துக்காக தொடர்ந்து உழைப்பவர் காதர் மொகிதீன் – முதல்வர் புகழாரம்



