spot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி - திருச்செந்தூர்: இனி கிளாம்பாக்கம் போகத் தேவையில்லை! புதிய நேரடிப் பேருந்து சேவை தொடக்கம்

ஆவடி – திருச்செந்தூர்: இனி கிளாம்பாக்கம் போகத் தேவையில்லை! புதிய நேரடிப் பேருந்து சேவை தொடக்கம்

-

- Advertisement -

ஆவடியிலிருந்து திருச்செந்தூருக்கு புதிய நேரடி SETC பேருந்து சேவை இன்று முதல் தொடக்கம்; இனி கிளாம்பாக்கம் செல்ல வேண்டிய அவசியமின்றி இங்கிருந்தே பயணிக்கலாம்!

ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோ

ரிக்கையை ஏற்று, ஆவடியிலிருந்து திருச்செந்தூருக்கு SETC (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்) சார்பில் புதிய நேரடிப் பேருந்து சேவை இன்று ( முதல் தொடங்கப்பட்டுள்ளது.
​இனி ஆவடி, அம்பத்தூர் பகுதி மக்கள் தென் மாவட்டங்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை அலைய வேண்டிய அவசியமில்லை. இந்தச் சேவை பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

we-r-hiring

​பயண விவரங்கள் மற்றும் கால அட்டவணை:
​இந்தப் பேருந்து Non-AC Sleeper/Seater (சொகுசு இருக்கை மற்றும் படுக்கை வசதி) கொண்டதாகும்.

இடம் நேரம்
ஆவடி (புறப்பாடு) மாலை 04:30
நிறுத்தம் 1 –  அம்பத்தூர்மாலை 04:50
நிறுத்தம் 2 –  திருமங்கலம்மாலை 05:10
நிறுத்தம் 3 –  மதுரவாயல்மாலை 05:30
நிறுத்தம் 4  – தாம்பரம்மாலை 05:45
நிறுத்தம் 5  – பெருங்களத்தூர்மாலை 06:00
நிறுத்தம் 6 –  மதுரைஅதிகாலை 03:00
நிறுத்தம் 7  – தூத்துக்குடிகாலை 06:15
முடிவு –  திருச்செந்தூர்காலை 08:15

மறுமார்க்கம்: திருச்செந்தூரில் இருந்து மாலை 05:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 08:45 மணிக்கு ஆவடி வந்தடையும்.

திருவள்ளூரில் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து!!

MUST READ