spot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிபிரேம் ஆனந்த் சின்ஹா ஆவடி காவல் ஆணையராக பொறுப்பு…

பிரேம் ஆனந்த் சின்ஹா ஆவடி காவல் ஆணையராக பொறுப்பு…

-

- Advertisement -

ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிய ஆணையர் பொறுப்பேற்றார்.பிரேம் ஆனந்த் சின்ஹா ஆவடி காவல் ஆணையராக பொறுப்பு…ஆவடி காவல் ஆணையரகத்தின் புதிய ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றார். அவருக்கு ஆவடி காவல் ஆணையரகத்தில்  பணியாற்றும் காவல்துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இவர் கே.சங்கருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, தென் மண்டல ஐஜியாக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, ஆவடி காவல் ஆணையராக பொறுப்பேற்றார். இவா் இதற்கு முன் சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராகவும், பின்னர் ஐஜியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே ஆணையாளராக இருந்த கே.சங்கர், சிறைத்துறை தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.

ஆவடி மாநகர காவல் ஆணையரகம் 2021-ல் உருவாக்கப்பட்டது, இதன் கீழ் 25 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த அதிரடி மாற்றங்கள் தமிழகத்தில் நடந்த பல ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தின் ஒரு பகுதியாகும்.

தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் – பிரேமலதா நம்பிக்கை…

we-r-hiring

 

 

 

MUST READ