சோழவரம் அருகே 2வது நாளாக வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்து குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சியில் முந்திரி தோப்பு என்கிற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சோழவரத்தில் 14 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்த நிலையில், குடியிருப்புகளை 2வது நாளாக சூழ்ந்துள்ள தண்ணீர் வெளியேறாததால் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இப்பகுதியில் பல ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால், உரிய முறையில் அரசு அதிகாரிகள் தலையிட்டு தண்ணீரை வெளியேற்ற வழிவகை செய்ய வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் மட்டும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்வதுடன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து 2வது நாளாக தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
திருப்பரங்குன்ற விவகாரம்…நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் – சண்முகம் வலியுறுத்தல்



