திருத்தணி அருகே அரசு பள்ளியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவனின் தந்தைக்கு அமைச்சர் நாசர் ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைக்கான பணி ஆணை வழங்கியும் மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சமாக அரசு உயர்த்தி வழங்கிய நிதி உதவியை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் கைப்பிடி சுவர் சரிந்து விழுந்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவரின் மகன் மோகித்(12) என்ற 7ம் வகுப்பு படித்து வந்த மாணவன் தலையில் சுவர் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாணவன் உயிரிழப்புக்கு காரணமான தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு அரசு வேலையும் அரசு அறிவித்த 3 லட்சம் நிதி உதவித் தொகையை 1 கோடியாக உயர்த்தி வழங்கிட கோரியும் உறவினர்கள் மாணவன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு எடுக்க விடாமல் போராட்டம் மேற்கொண்டனர்.
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி நீண்ட நேரம் பேச்சுவார்த்தை தொடர்ந்து அவர் சடலத்தை எடுக்க உறவினர்கள் சமாதித்ததை தொடர்ந்து போலீசார் சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
மாணவன் உடல் பிரேத பரிசோதனை முடிந்தும் உறவினர்கள் கோரிக்கை நிறைவேறாததால் மாணவனின் உடலை பெறாமல் மருத்துவமனையில் போராட்டம் மேற்கொண்டு வந்திருந்தனர்.
அவர்களிடம் அமைச்சர் நாசர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் கூட்டாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், மாணவன் தந்தையான சரத்குமாருக்கு ஊரக வளர்ச்சித் துறையில் அரசு வேலைக்கான பணியானை மூன்று லட்சம் இருந்து 5 லட்சமாக உயர்த்தி வாங்கியதற்காண நிதி உதவியை அமைச்சர் நாசர் அவர் தந்தையிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் குடும்பத்திற்கு அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் 10 லட்சம் நிதி உதவியும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் 5 லட்சம் நிதி உதவியும் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து மாணவன் சடலத்தை உறவினர்கள் அவர் சொந்த ஊரான கொண்டாபுரம் கொண்டு சென்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தனர்.


