spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்“மஞ்சள் என்றாலே தனி உற்சாகம் தான்“ – விஜய்

“மஞ்சள் என்றாலே தனி உற்சாகம் தான்“ – விஜய்

-

- Advertisement -

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சரளையில் த.வெ.க பரப்புரை கூட்டத்தில் த.வெ.க தலைவா் விஜய் பேசினாா்.“மஞ்சள் என்றாலே தனி வைப் தான்“ – விஜய்ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சரளையில் த.வெ.க பரப்புரை கூட்டத்தில் விஜய் மங்களகரமான மஞ்சள் விளையும் ஈரோடு விவசாயத்துக்கு பெயர் போன மண் ஈரோடு என்று தனது உரையை தொடங்கினாா். அதில் ” நான் சினிமாவுக்கு வந்தபோது எனக்கு 10 வயது. அப்போதிலிருந்து எனக்கும் உங்களுக்கும் உறவு உள்ளது. என்னை மக்கள் கைவிட மாட்டார்கள் என்று கூறினாா். காளிங்கராயன் கதையை கூறி பெருந்துறை கூட்டத்தில் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது, உயரமான கம்பத்தில் ஏறிய த.வெ.க தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னா் விஜய் கேட்டுக்கொண்டதை அடுத்து த.வெ.க தொண்டர் கீழே இறங்கினார். அதன் பின்னா் தனது உரையை தொடா்நத விஜய் அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்ளின் பெயரை பயன்படுத்துவதை யாரும் கேள்வி கேட்க கூடாது என்று அதிமுகவுக்கு விஜய் பதிலடி கொடுத்தாா். தமிழ்நாட்டில் சீர்திருத்த நெம்புகோல் பெரியார் என பரப்புரை கூட்டத்தில் விஜய் புகழாரம்.

எம்ஜிஆரை பற்றி பேசினால் அதிமுகவினர் புலம்புவது ஏன்? என்றும் களத்தில் இருப்பவர்களை மட்டும் தான் எதிா்ப்போம், விமா்சிப்போம். களத்தில் இல்லாதவா்களை கேள்வி கேட்டமாட்டோம்.  எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த இந்த விஜயை மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளாா். உங்களை நம்பிதான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். என்னுடன் கடைசி வரை நிற்பீர்கள் என எனக்கு தெரியும். அதேபோல், தமிழக மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் உழைப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளாா்.  ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் மக்களுக்கான சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது என்று விஜய் அறிவித்துள்ளார். மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

we-r-hiring

மேலும், அப்படியே செய்தாலும் “ஓசில போற ஓசில போற“ ( பொன்முடி பேச்சு) பெண்களை அசிங்கப்படுத்துவதை நாங்கள் தட்டிக்கேட்போம் என்று ஆவேசமாக கூறினார்.

நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் – செங்கோட்டையன்

MUST READ