தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வேலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சேலத்தில் இன்னும் இடம் தேர்வாகாத நிலையில் வேலூரில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாமக்கல் கரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களின் பிரச்சாரத்திற்கு பிறகு வேலூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பிரச்சாரம் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டு, அந்த சமயத்தில் கட்சியினுடைய பொதுச் செயலாளர் இடம் தேர்வு செய்யக்கூடிய பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பார்க்கிங் சந்திப்பு நிகழ்ச்சி என இடங்கள் பிரிக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் கட்சியின் சார்பில் காவல் ஆணையரகத்தில் அனுமதி கோரி தமிழக வெற்றி கழகத்தினர் கடிதம் கொடுக்க உள்ளனர்.
செய்தியாளர் மீது குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா? -டி.டி.வி.தினகரன் ஆவேசம்


