தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளித்தவர்களிடம் அக்ட்சித் தலைவர் விஜய்யின் பங்கேற்பு இல்லாமலேயே இரண்டாம் கட்டமாக நேர்காணல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இரண்டாம் கட்ட நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணல் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்பு இல்லாமல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த 10ஆம் தேதி 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான முதல் கட்ட நேர்காணலை விஜய் நேரடியாக நடத்தினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, புதுச்சேரி உட்பட 30 தொகுதிகளுக்கான நேர்காணல், சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில், நெல்லை, குமரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நாமக்கல், கடலூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
நேர்காணலின்போது, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர் தேர்வு பணிகளை விரைவுபடுத்த கட்சி தலைமையகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், இணை செயலாளர் நிர்மல் குமார், கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று, விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.
முதல் கட்டத்தில் விஜய் நேரடியாக பங்கேற்ற நிலையில், இந்த இரண்டாம் கட்ட நேர்காணலில் அவர் பங்கேற்காதது பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…
