Homeசெய்திகள்அரசியல்அதிமுகவுக்கு மேலும் அதிர்ச்சி…எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

அதிமுகவுக்கு மேலும் அதிர்ச்சி…எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

-

- Advertisement -

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் சாபநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினாா்.அதிமுகவுக்கு மேலும் அதிர்ச்சி…எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். விராலிமலை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த அவர், தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ராஜினாமா கடிதம் முறைப்படி இருப்பதாக சபாநாயகர் தெரிவித்ததுடன், அதனை ஏற்றுக்கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

சி.விஜயபாஸ்கர் விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தலைமையின் செயல்பாடுகள் குறித்து அவர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், இந்த ராஜினாமா முடிவு முக்கிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா மற்றும் சத்தியபாமா ஆகிய நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது சி.விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்துள்ளதால், தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அடுத்தடுத்த ராஜினாமாக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த ராஜினாமாக்களின் பின்னணியில் “குதிரை பேரம்” நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன. குறிப்பாக, ஆதரவு அளித்த கட்சிகளின் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் தவெக தொடர்ந்து அரசியல் பேரங்களில் ஈடுபடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பதவியை ராஜினாமா செய்வது வாக்காளர்களுக்கு செய்யப்படும் துரோகம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. அதேபோல், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் தொடர் ராஜினாமா ஆரோக்கியமான அரசியல் நடைமுறை அல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கருத்து தெரிவித்திருந்தார். தொடர்ச்சியான ராஜினாமாக்களால் அதிமுகவின் சட்டமன்ற பலம் மேலும் குறையும் என்ற அரசியல் மதிப்பீடுகள் வெளியாகி வரும் நிலையில், சி.விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதரணி…பின்னணி என்ன?

MUST READ