Homeசெய்திகள்அரசியல்கூட்டணியே வேண்டாம் என மக்கள் கூறுகிறார்கள்… தனித்து போட்டி குறித்து பரிசீலிப்போம் - மு.க. ஸ்டாலின்

கூட்டணியே வேண்டாம் என மக்கள் கூறுகிறார்கள்… தனித்து போட்டி குறித்து பரிசீலிப்போம் – மு.க. ஸ்டாலின்

-

- Advertisement -

கூட்டணி குறித்து மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பரிசீலிப்பதாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கலைஞர் மு. கருணாநிதி காலத்தைப் போல கூட்டணியை பாதுகாப்பாக வைத்திருக்கவே தி.மு.க விரும்புவதாகவும், மக்கள் மத்தியில் கூட்டணியே தேவையில்லை என்ற கருத்து நிலவுமானால் அதையும் நிச்சயமாகப் பரிசீலிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.கூட்டணியே வேண்டாம் என மக்கள் கூறுகிறார்கள்… தனித்து போட்டி குறித்து பரிசீலிப்போம் - மு.க. ஸ்டாலின்

திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் உ. மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், கூட்டணி அரசியல் குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

we-r-hiring

மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த மு.க. ஸ்டாலின், பின்னர் பேசியபோது, “இந்த திருமண விழாவில் கலந்து கொண்டது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒன்று மதிவாணன் இல்லத் திருமணம்; மற்றொன்று கலைஞர் பிறந்த மண்ணான திருவாரூரில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது” என்றார்.

சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற விவாதங்களை குறிப்பிட்ட அவர், “தமிழகத்தில் விவசாயப் பிரச்சினை, மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி கோரிக்கைகள் உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது, ‘அப்பாவை காணோம்’ போன்ற பேச்சுகள் தேவையற்றவை” என்று விமர்சித்தார்.

மேலும், “தமிழக மக்களின் பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக எடுத்துரைத்த பிறகும் ஆளுங்கட்சியினர் சட்டப்பேரவை மரபுகளை மீறி நடந்து கொள்கின்றனர். அப்பாவை எங்கும் தேட வேண்டாம்; அவர் தமிழக மக்களின் மனதில் நிரந்தரமாக இருக்கிறார்” என்றார்.

தனது அரசியல் அனுபவம் குறித்து பேசிய அவர், “எனது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று ஆய்வு செய்துள்ளேன். முதலமைச்சராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளேன். இதுபோன்று யாரும் செயல்பட்டதில்லை” என்று கூறினார்.

மேலும், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்களை நினைவுகூர்ந்த அவர், “மகளிர் உரிமைத் தொகை திட்டம் இருக்கும் வரை தமிழகத்தை நான்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இறுதியாக கூட்டணி குறித்து பேசிய மு.க. ஸ்டாலின், “கூட்டணியே வேண்டாம், தனியாக நிற்க வேண்டும் என்று மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். அதனை பரிசீலிப்போம், பரிசீலிப்போம், பரிசீலிப்போம். கலைஞர் அமைத்த கூட்டணியைப் போல கட்டுக்கோப்பாக கூட்டணியை வைத்திருக்கவே நான் விரும்பினேன். எங்கள் கூட்டணியில் இருந்து யாரையும் நாங்கள் வெளியேற்ற மாட்டோம். அவர்கள் விலகிச் சென்றால் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விஜய்யின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் விஜயபாஸ்கர்…தயாராகும் ஆதரவாளர்கள் பட்டியல்….

MUST READ