Homeசெய்திகள்அரசியல்விஜய்யின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் விஜயபாஸ்கர்…தயாராகும் ஆதரவாளர்கள் பட்டியல்….

விஜய்யின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் விஜயபாஸ்கர்…தயாராகும் ஆதரவாளர்கள் பட்டியல்….

-

- Advertisement -

அதிமுகவில் இருந்து விலகி தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜய்யின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் விஜயபாஸ்கர்…தயாராகும் ஆதரவாளர்கள் பட்டியல்….

விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த விஜயபாஸ்கர், அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையை விமர்சித்து வந்த அவர், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே எம்எல்ஏ பதவியிலிருந்தும் விலகியதாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகிய சில முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அந்த வரிசையில் தற்போது விஜயபாஸ்கரும் தவெகவில் இணையக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

we-r-hiring

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த பிறகே கட்சியில் இணைய வேண்டும் என்ற விருப்பத்தில் விஜயபாஸ்கர் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சென்னையில் காத்திருப்பதாகவும், விரைவில் அவருக்கு நேரம் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அவர் எடுக்கும் எந்த அரசியல் முடிவுக்கும் முழு ஆதரவு வழங்குவதாக உறுதி தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக வெற்றி கழகத்தில் இணைய விரும்பும் அவரது ஆதரவாளர்களின் பட்டியலும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

கட்சி இணைப்பு நடைமுறைக்கு வந்தால், புதுக்கோட்டையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் அல்லது வரவேற்பு நிகழ்ச்சி நடத்தும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜூன் 22-ஆம் தேதி நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் பிறந்தநாளையொட்டி, விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.

இதற்கு முன்பு அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த பல முக்கிய நிர்வாகிகள் விஜய்யை நேரில் சந்திக்காத நிலையில், விஜயபாஸ்கர் மட்டும் நேரடி சந்திப்புக்குப் பிறகே இணைவதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

மூன்றில் இரண்டு பங்கு பலத்தை நோக்கி பாஜக…நாடாளுமன்றத்தில் மாறும் அரசியல் கணக்கு!

MUST READ