spot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 கோடி ரூபாய் நிதி முறைகேடு!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 கோடி ரூபாய் நிதி முறைகேடு!!

-

- Advertisement -

தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான DR.கார்த்திகேயன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளாா்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 கோடி ரூபாய் நிதி முறைகேடு!!சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயக்குனரும், தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருமான கார்த்திகேயன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சென்னை மாதவரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கால்நடை மருத்துவ காப்பீட்டு அறக்கட்டளையில் 2021 ஆம் ஆண்டு முதல் நிதி முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து அங்கு பணியாற்றிய தற்காலிக செயல் அதிகாரி CEO வடிவேல் இடம் கேட்டபோது விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நிதி முறைகேடு குறித்த அனைத்து ஆவணங்களையும், அபகரித்துக் கொண்டு தலை மறைவாகிவிட்டதாக கூறியுள்ளார்.

இதில் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 12 வங்கி கணக்குகளில் இருந்து கால்நடை மருத்துவ காப்பீட்டு அறக்கட்டளை தற்காலிக CEO வடிவேல் கால்நடை நல கல்வி மைய பெண் உதவியாளர் ரஜினி உட்பட 12 பேர் வங்கி கணக்கில் 2 கோடியே 85 லட்சத்து 38 ஆயிரம் பணம் முறைகேடாக அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக பல்கலைக்கழக இயக்குனரின் கையெழுத்தை போலியாக போட்டு நிதி முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை அடுத்து ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மாதவரம்  கால்நடை மருத்துவ காப்பீட்டு அறக்கட்டளை தற்காலிக CEO வடிவேல் கால்நடை நல கல்வி மைய பெண் உதவியாளர் ரஜினி, தனியார் நிறுவனம் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

தற்காலிக செயல் அதிகாரி வடிவேல் தலைமறைவாக உள்ள நிலையில் பெண் உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து ஆவடி காவல் ஆணையர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தேசிய ஊடங்களும் திராவிட முன்னேற்றக்கழகமும்!

MUST READ