spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிவீடு வாடகைக்கு விடுவதாக கூறி, பல லட்சம் ரூபாய் நுதன மோசடி…

வீடு வாடகைக்கு விடுவதாக கூறி, பல லட்சம் ரூபாய் நுதன மோசடி…

-

- Advertisement -

வீடு வாடகை விடுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபா்களை கைது செய்யக்கோரி ஆவடி காவல் ஆணையரகம் முன்பு  பொது மக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி: வீடு வாடகைக்கு எனக் கூறி, பல லட்சம் ரூபாய் நுதன மோசடி…சென்னை புறநகர் பகுதியில் வீடு வாடகைக்கு விடப்படும் என சாலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை நம்பி பூந்தமல்லியில் உள்ள தனியார் அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்றுள்ளனர். அங்கு வீடு வாடகை மற்றும் லீசுக்கு பெற்று தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம், அறிவி நம்பி மோகனா ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். பின்பு ஒரு சிலருக்கு மட்டும் வீடு வாடகைக்கு விடப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு வீடு வழங்காமல் இழுத்து அடித்துள்ளனர். வாடகை வீட்டில் குடியேறிய மக்களும் ஒரு சில நாட்களில் அந்த வீடுகளுக்கு தான் உரிமையாளர் என்றும் வாடகை சரியாக வரவில்லை என்றும் உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் வீட்டின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள்  கேட்டபோது அவர்கள் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அறிவு நம்பி மோகனா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பணத்தை திரும்ப பெற்றுத் தரக்கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் குவிந்தனர். திடீரென அனைவரும் காவல் ஆணையர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இதனிடைய மோசடி செய்த அறிவி நம்பி மோகனா உள்ளிட்டோர்  ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது போன்ற மோசடி வேலையில் ஈடுபட்டதும் தற்போது தெரியவந்துள்ளது. இதுவரை பொதுமக்களிடம் இரண்டு கோடிக்கு மேல் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

குடியுரிமை பறிக்க சதி…புள்ளி விவரத்தோடு பேசிய திருமாவளவன்… நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்…

we-r-hiring

MUST READ