spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பிரபல ரவுடியின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!!

பிரபல ரவுடியின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!!

-

- Advertisement -

பத்மநாபபுரம் கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட பிரபல ரவுடி விசாரணை நடத்த வந்த போலீசாரின் வாகனத்தின் மீது ஜீப் கொண்டு மோதி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபல ரவுடியின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!! கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்மநாபபுரம் அருகே இடவூர் புத்தன்காவு பகுதியில் உள்ள மஹாவிஷ்ணு கோவில் திருவிழாவின் போது அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சஜீவ் என்பவர் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் கோவில் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது ஆத்திரமடைந்த சஜீவ் தனது ஜீப் வாகனத்தை கொண்டு போலீசாரின் வாகனம் மீது மோதி தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் போலீஸ் வாகனத்தில் இருந்த அனீஷ் என்ற காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து சஜீவ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

திமுக தான் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது – வைத்திலிங்கம்

we-r-hiring

MUST READ