அடகு கடை நடத்தி சுமார் 300 பவுன் நகைகளுடன் 8 ஆண்டுகளாக தலைமறைவான குடும்பம் ரூ 3 ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வந்த போது மோசடி நபரின் தாயாரை காருடன் கிராம மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி பகுதி நடுத்தெருவை சேர்ந்தவர் சேதுராமன் மகன் ஜீவானந்தம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக அப்பகுதியில் நகை அடகு கடை வைத்து அடகு வாங்குவது மற்றும் ஏல சீட்டு, வட்டிக்கு பணம் கொடுத்து பைனான்ஸ் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நகை அடகு வைத்தவர்கள் நகை திருப்புவதற்கு வந்தவர்களிடம் ரசீதையும் பணத்தையும் பெற்று நகை திருப்பி தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளாத கூறப்படுகிறது.
இது நாளடைவில் ஜீவானந்தம் மோசடி செய்து ஏமாற்றி வருகிறார். என்பது கிராம மக்கள் தெரிந்து ஜீவானந்தனிடம் கேட்டுள்ளனர். சுதாரித்துக் கொண்ட ஜீவானந்தம் இரவோடு இரவாக ஊரைவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார். இது குறித்து அன்று சுமார் 300 பவுன் நகையும் ஏலச் சீட்டு பணம் சுமார் 15 லட்சமும் கொடுத்து ஏமாந்து விட்டதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு தமிழக அரச பொங்கல் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்குவது தெரிந்த ஜீவானந்ததின் தாயார் ஜானகி (65) பொங்கல் தொகுப்பு மற்றும் பணத்தை வாங்குவதற்காக காரில் இரும்பாடி கிராமத்திற்கு இரவு வந்துள்ளார். இதனையறிந்த பாதிக்கப்பட்ட மக்களும், கிராம மக்களும் காரில் ஜானகியம்மாளுடன் காரை சிறை பிடித்தனர். ஜானகி அம்மாளுடன் பாதிக்கப்பட்டவர்கள் கிராம மக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சோழவந்தான் காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கிராம மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கிராம மக்களிடமிருந்து ஜானகி அம்மாளை மீட்டு சோழவந்தான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் முயற்சிப்பதால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பெண்மணியை மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


