spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சுமார் ரூ.2 கோடி அளவிலான தங்க கட்டியை கொள்ளையடிக்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் போலீசார் மீட்டு சாதனை…

சுமார் ரூ.2 கோடி அளவிலான தங்க கட்டியை கொள்ளையடிக்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் போலீசார் மீட்டு சாதனை…

-

- Advertisement -

மயிலாடுதுறையில் ரூ.2 கோடி மதிப்புடைய ஒன்றரை கிலோ தங்கத்துடன் 17 வயது சிறுவன் தப்பி ஓடிய 3 மணி நேரத்தில் பிடிபட்டது எப்படி?சுமார் ரூ.2 கோடி அளவிலான தங்க கட்டியை கொள்ளையடிக்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் போலீசார் மீட்டு சாதனை…மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் மகாராஷ்டிராவை சேர்ந்த சுஹாஷ் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகைகளை உருக்கி தரும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த    17 வயது சிறுவன் 15 தினங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். கடையில் சுஹாஷ்  மற்றும் சிறுவன் ஆகிய இருவர் மட்டும் பணியில் இருந்த நிலையில், ஒன்றரை கிலோ தங்க நகைகளை உருக்கி அதனை பார் ஆக மாற்றிய சுகாஷ், அதனை எடை போட்டு எடுத்து வருமாறு சிறுவனிடம் கொடுத்துள்ளார். அதனை எடுத்துக்கொண்டு கடையின் முகப்பு பகுதிக்கு வந்தவன், திடீரென மனம் மாறி தங்க பாரினை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனைக் கண்ட சுகாஷ் கூச்சிலிட்டபடி சிறுவனை விரட்டிய போதும் அவன் வேகமாக ஓடி தலைமறைவாகி விட்டான்.

இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து சிறுவனை தேடும் பணியில் தனிப்படை முடுக்கிவிடப்பட்டது. மாலை 6 மணிக்கு தலைமறைவான சிறுவனை இரவு 9 மணிக்குள் மயிலாடுதுறை ரயில்நிலையம் அருகில் தனிப்படை போலீசார் பிடித்து நகையை மீட்டுள்ளனர்.

we-r-hiring

மயிலாடுதுறை நகரம் தங்கநகை விற்பனை, தங்கநகை தொழில், தங்கம் உருக்கும் மையம், நகை அடகுகடை என நீக்கமற நிறைந்திருக்கும்.  இதில் 90 சதவிகிதம் பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் மார்வாடிகளும் தங்க நகை தயாரிக்கும் தொழில் செய்பவர்களும் அடங்கும்.  தற்பொழுது தங்கநகை விலை உயர்வால் பழைய நகைகளை விற்று புது நகைகளை வாங்கும் மோகம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதனால் நகைகடைகளுக்கு விற்கவருபவர்களிடம் வாங்கிய நகைகளை இதுபோன்று நகை உருக்குபவர்களை நாடி அவற்றை உருக்கி மீண்டும் நகைக்கடைகாரர்களே வாங்கிக் கொள்வார்கள். இந்த தொழிலில் மகாராஷ்ட்டிரத்தை சேர்ந்த சுகாஷ் என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறைக்கு வந்து தனது தொழிலை செய்து வருகிறார்.  இவரது கடைக்கு வேலைக்காக மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள ஏஜன்டுகளை அணுகி இந்ததொழில் தெரிந்த நபர்களை வேலைக்கு அமர்த்துவது வாடிக்கை.

இதே போல் 17 வயது சிறுவனை 15 தினங்களுக்கு முன்பு மகாராஷ்ட்டிராவிலிருந்து வரவழைத்து வேலையில் சேர்த்துள்ளார். வேலை முடிந்ததும் நகை பட்டறையில் உள்ள பின்பகுதி அறையில் தங்கியுள்ளான்.  மயிலாடுதுறை நகரில் 100க்கும் மேற்பட்ட நகைகடைகள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பெரிய நகை வியாபார நிறுவனங்களும் மயிலாடுதுறையில் தங்களது நகைகடை கிளையை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். பழைய நகைகளை எடைபோட்டு எடுத்துச் சென்று அவற்றை உருக்கி மீண்டும் அதே நகைகடைகளுக்கு திருப்பி அளிக்கும் பணியை பார்த்த நேரத்தில்தான் அந்த சிறுவன் 1.5 கி.கி. எடைகொண்ட தங்க கட்டியை எடுத்துக் கொண்டு ஓடியிருந்தான்.  சுகாஷ் விரட்டியும் அவனைப் பிடிக்க முடியவில்லை.

சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்ட மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் உடனடியாக உதவி ஆய்வாளர்பாரதி தலைமையில் தனிப்படைஅமைத்து தேட உத்தரவிட்டிருந்தார். மயிலாடுதுறையில் திரும்பிய இடங்களிலெல்லாம் காவல்துறை மற்றும் தனியார் வணிக நிறுவனங்களின் சிசிடிவி கேமராக்கள் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்கும் அவற்றை போலீசார் ஆய்வு செய்தபோது அந்தசிறுவன் மயிலாடுறை ரயில்நிலையம் பக்கம் சென்றது தெரியவந்தது. உடனடியாக போலீசார் சல்லடைபோட்டு தேடியபோது ரயில்நிலையம் அருகில் பதுங்கிப் பதுங்கியபடியே சென்ற சிறுவனை மடக்கிப் பிடித்தபோது அவனிடம் தங்க கட்டி இருந்தது தெரியவந்தது. அவனைக் கைதுசெய்து தங்க கட்டிகளை மீட்டனர். இரவு 9 மணிக்கு அந்த சிறுவன் பிடிபட்டான், சம்பவம் நடந்த 3 மணிநேரத்திற்குள் மயிலாடுதுறை போலீசார் சுமார் ரூ.2 கோடி அளவிலான தங்க கட்டியை மீட்டு சாதனைப்படைத்துள்ளனர்.

மயிலாடுதுறையில் கடந்த 20 ஆண்டுகளில் சென்னையிலிருந்து நகைகளை வாங்கிவரும்போது கொள்ளையடிப்பதும், நகைகடைக்கு கொண்டுசெல்லும்போது பறித்துக் கொண்டு ஓடுவதும் அடகு கடைகளை மூடிவிட்டு ஓடிவிடுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.  சமீப காலமாக இது ஓரளவிற்கு குறைந்திருந்தது, தற்பொழுது இந்த சம்பவம் மயிலாடுதுறை நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் செய்தியாளர் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், “மயிலாடுதுறையில் நேற்று மாலை தங்கம் உருக்கும் தொழில் கூடத்தில் இருந்து ஒன்றரை கிலோ தங்க கட்டி திருடு போன நிலையில், இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டு ரயில் நிலையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

நகைக்கட்டியுடன் தப்பி ஓடிய சிறுவன் ரயில்வே நிலையம் அருகில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு விரைந்த போலீசார் ஒன்றரை கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்து சிறுவனை கைது செய்தனர்.

இளஞ்சிறார் என்பதால் அந்த சிறுவனை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த மூன்றரை மணி நேரத்தில் குற்றவாளி பிடிக்கப்பட்டு, அவரிடமிருந்து தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” என்று கூறினாா்.

1000 பேருக்கு வேலை…தமிழ்நாடு ஏ.ஐ. தொழில்நுட்ப மாநிலமாக மாறும் – டி.ஆர்.பி.ராஜா

MUST READ