சென்னை சைதாப்பேட்டை அதிமுக பகுதி செயலாளர் சைதை சுகுமார் சாவில் மா்மம் உள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதி செயலாளர் சுகுமார் (47) தன்னுடைய அலுவலகத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்பட்டதாக குமரன் நகர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக எம்ஜிஆர் பிறந்த நாளான இன்று பல்வேறு கட்சி சார்பாக பல்வேறு ஏற்பாடுகளை செய்துவிட்டு அலுவலகத்திலேயே இருப்பதாக வீட்டில் தெரிவித்துவிட்டு, நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குமரன் நகர் போலீசார் தகவல் தெரிவித்த நிலையில் சுகுமாரின் சகோதரி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சுகுமாருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளனர். முழுவதுமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது சாவில் மர்மம் இருக்கிறது எனவும் அதேபோல் 5 லட்சம் ரூபாய் செலவு செய்து பொதுமக்களுக்கு பொங்கல் கொண்டாட்டத்தின் பொழுது கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை வைத்து பரிசுகளையும் வழங்கி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகுமாரின் சகோதரி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.


