அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் தவறுதலாக குப்பையில் போடப்பட்ட தங்க கம்பளை ஒரு மணி நேரத்தில் தேடி கண்டுபிடித்து தந்த துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்தவர் கிரிஜா இவர் இன்று காலை மாநகராட்சியின் குப்பைத் தொட்டியில் குப்பைகளைக் கொட்டியுள்ளார். சிறிது நேரத்தில் மாநகராட்சியின் குப்பை லாரியும் குப்பைகளை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் வைத்திருந்த ஒரு சவரன் தங்க கம்மல் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுக்க தேடி பார்த்தும் கம்பல் கிடைக்காததால் தவறுதலாக மாநகராட்சி குப்பைத் தொட்டியில் குப்பையுடன் தங்க கம்பல் போட்டு இருப்பதை உணர்ந்த கிரிஜா உடனடியாக துப்புரவு பணியாளர்களை தொடர்பு கொண்டு தங்க கம்பல் குப்பையில் கொட்டப்பட்டு இருப்பதை தெரிவித்துள்ளாா்.

இதை அடுத்து குப்பை லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் நவீன் குமார் அங்கிருந்த இருந்த துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து கிரிஜா கொட்டிய குப்பைகளை அடையாளம் கண்டு அதில் தேடி சுமார் ஒரு மணி நேரத்தில் கம்மலை கண்டுபிடித்தனர்.பின்னர் தங்க கம்பலை கிரிஜாவிடம் ஒப்படைத்தார். இது அனைவரிடத்திலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.


