spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே மின்சார ரயில் மோதி வாலிபர் பலி!!

ஆவடி அருகே மின்சார ரயில் மோதி வாலிபர் பலி!!

-

- Advertisement -

ஆவடி அருகே மின்சார ரயில் மோதிய சம்பவ இடத்திலேயே வாலிபா் பரிதாபமாக பலியானார்.ஆவடி அருகே மின்சார ரயில் மோதி வாலிபர் பலி!!

ஆவடி அருகே பட்டாபிராம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் சரத் (34). இவருக்கு அனிதா (30) என்ற மனைவி உள்ளார். ஆவடி, காந்தி நகரில் விளையாட்டு மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை சரத் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு விற்பனை முடிந்து கடையை பூட்டிவிட்டு வீடு திரும்புவதற்காக, அங்குள்ள ரயில் தண்டவாளத்தை சரத் கடந்து வந்துள்ளார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் சென்ற மின்சார ரயில், தண்டவாளத்தை கடந்த சரத்தின்மீது வேகமாக மோதியது.

we-r-hiring

ரயில் மோதியதில் சரத் அடிபட்டு உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அங்கு சரத்தின் சடலத்தை கைப்பற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனா்.

ராஜமௌலி இயக்கத்தில் ரஜினி?…. தீயாய் பரவும் தகவல்!

 

MUST READ