ஆவடி ஜோதி நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆவடி மாநகராட்சி 33 வது வார்டு ஜோதி நகரில் சுமார் 1000-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. அங்குள்ள 4 பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். ஆவடி மாநகராட்சி சார்பில் பெயருக்கு என்று மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதாக சொல்கின்றனர். ஆனால் டீசல் இல்லாமலும், மோட்டார் பழுதடைந்து போனாதாலும் தண்ணீரை வெளியேற்றவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அமைச்சர்கள் வருகிறார்கள் என்றதும் மோட்டார் இயக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மழைநீர் சூழ்ந்துள்ள ஜோதி நகர் பகுதியை கே.என்.நேரு, அமைச்சர், சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை வேகப்படுத்தி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் – டிடிவி தினகரன் பேட்டி



