spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் - டிடிவி தினகரன் பேட்டி

எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் – டிடிவி தினகரன் பேட்டி

-

- Advertisement -

மீண்டும் NDA  கூட்டணிக்கு வர வேண்டும் என என்னிடம் யாரும் பேசவில்லை எனவும்  எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் எனவும் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளாா்.எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் - டிடிவி தினகரன் பேட்டிமதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த டிடிவி தினகரன், “செங்கோட்டையன் 72 லிருந்து கட்சியின் பொறுப்பில் இருக்கிறார். அதிமுகவின் சீனியர் அவர். அம்மா (ஜெயலலிதா)  அவர்களால் வெற்றி பெறப்பட்டு, வைக்கப்பட்ட 18  சட்டமன்ற உறுப்பினர்கள் பிப்ரவரி மாதம் 2017 ஆம் ஆண்டு திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பழனிசாமி ஆதரவாக வாக்களித்தவர்கள் 18 சட்டமன்ற உறுப்பினர்கள். கே.பி.முனுசாமி எனக்கு பதில் சொல்வதாக தவறாக சொல்கிறார். அண்ணன் முனுசாமிக்கு எல்லாம் தெரியும் இருந்தாலும். சபாநாயகர் கூப்பிட்டு தகுதி நீக்கம் செய்ய மாட்டார் ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்றால் சட்டமன்ற குழு தலைவர் கொடுத்தால்தான் எடுப்பார்.

we-r-hiring

அண்ணன் முனுசாமி எங்களுக்கு பழைய நண்பர். அன்று சட்டமன்றத்தில் திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் செம்மலை உட்பட எதிர்த்து வாக்களித்தார்கள். அன்று பன்னீர்செல்வம்  தர்ம யுத்தத்திற்கு  ஆதரவாக இருந்தவர் முனுசாமி, அதை மறந்து விட்டு பேசுகிறார்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அப்புறம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கூறினர். அம்மாவால் சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்கள் 11 பேரும் மனம் திரும்பி வருவார்கள் என நான் செய்ய வேண்டாம் என கட்சியின் சார்பில் சொன்னேன். இது முனுசாமிக்கு தெரிய வாய்ப்பில்லை. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை பழனிசாமி மீதான நம்பிக்கை இல்லாத காரணத்தால் கவர்னரை சந்தித்து மாற்ற வேண்டும் என மனு கொடுத்தனர். ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என மனு கொடுக்கவில்லை. பழனிச்சாமி துரோகமும் பொய்யை தவிர வேற எதுவும் பேசத் தெரியாதவர். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த தொகுதியில்  சென்று தகுதி நீக்கம் செய்தாரா? செங்கோட்டையன் அண்ணன் மன வருத்தத்தில் எல்லோரும் ஒன்றிணை வேண்டும் என்ற கோரிக்கையை, நிராகரித்தது இல்லாமல் 50 ஆண்டு வரலாறு உள்ளவரை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு அவர் வேற கட்சியில் சேர்ந்திருக்கிறார். இத்தனை நாள் யோசித்து அந்த முடிவெடுத்து உள்ளார். பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார். துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுப்பதற்கு அவர் தயாராகிவிட்டார் என்பதுதான் அவரது நடவடிக்கையில் தெரிய வருகிறது.

தலைவர்கள் மீதான படத்தை வைத்திருப்பது நினைவிடத்தில் செல்வது உண்மையான மனநிலையை காட்டுகிறது. மழைக்காலத்தில் சென்னையில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் போது நீர் தேங்கி பள்ளமான இடங்களில் தேங்குகிறது.  திமுக கட்சிக்கு ஆதரவாக இதை சொல்லவில்லை. அவர்கள் சரியாகத்தான் நடவடிக்கை எடுத்து எவ்வளவு விரைவாக நீரை வெளியேற்ற முடியுமோ அந்த அளவுக்கு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அம்மா காலத்தில் இருந்து சரி செய்யப்பட்டு வருகிறது இவர்களும் சரி செய்து பணிகளை முடிந்த அளவு சரியாகத்தான் செய்கிறார்கள். நட்பு ரீதியாக பாஜகவில் இருந்து பேசுகிறார்கள்  மீண்டும் NDA  கூட்டணிக்கு வர வேண்டும் என என்னிடம் யாரும் பேசவில்லை“ என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினாா்.

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

MUST READ