spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹீரோவாக மாறிய வில்லன்!! பட பிரமோஷனில் குத்தாட்டம் போட்ட நடிகா்…

ஹீரோவாக மாறிய வில்லன்!! பட பிரமோஷனில் குத்தாட்டம் போட்ட நடிகா்…

-

- Advertisement -

நடிகர் ஆனந்த் ராஜின் மதராஸ் மாஃபியா கம்பெனி படத்தின் படகுழுவினருடன் படத்தின்  பாடலுக்கு  ஶ்ரீகாந்த் தேவா, இசையமைத்து மாணவர்கள் குத்தாட்டம் போட்டனா்.ஹீரோவாக மாறிய வில்லன்!! பட பிரமோஷனில் குத்தாட்டம் போட்ட நடிகா்…மதராஸ் மாஃபியா கம்பெனி எனும் பெயரில் வில்லன் நடிகர் ஆனந்தராஜ் கதாநாயகனாகவும், கதாநாயகியாக பிக்பாஸ் புகழ் நடிகை  சம்யுக்தா நடித்து இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசையில் நவம்பர் 14-ம் தேதி திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஒன்றாக ஆவடியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் விஸ்காம் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் ஆனந்தராஜ், நடிகை சம்யுக்தா, இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா, பிரபல பாடலாசிரியர் மு.கார்த்திக், இயக்குநர் முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். அப்பொழுது படத்தின் முக்கிய பாடலை மேடையிலேயே இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசைத்து காட்டினார்.

இதனை தொடர்ந்து அந்த பாடலுக்கு கல்லூரி மாணவ மாணவியருடன் படக்குழுவினர் நடனமாடி உற்சாகமூட்டினர். இதனை தொடர்ந்து மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட படக்குழுவினர் படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.மேடையில் M குமரன் திரைபடத்தில் வரும் அம்மா பாடலை பாடி இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா மாணவர்களை நெகிழ செய்தார்.

we-r-hiring

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்யும்படியும்,தொடர்ச்சியாக ஆல்பம் தயாரிக்க உள்ளதால் இயக்குனர், பாடலாசிரியர், நடிகர் நடிகைகள் என விருப்பம் உள்ள விஸ்காம் மாணவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு விடுத்தார். மேடையில் பேசிய நடிகை சம்யுக்தா நீங்கள் இருக்கும் கல்லூரி வாழ்க்கைதான் மிக மிக சிறந்த வாழ்க்கை, தற்போது இங்கு தேர்வு பிரச்சினை, காதல் பிரச்சனை என இருக்கும் இந்த வாழ்க்கை முடிந்து வெளியே வந்தால் இந்த வாழ்க்கையே பெரிது என தோன்றும் எனவும் தொடர்ந்து ஆண்களை விட பெண்களுக்கு ஒரு கட்டத்திலும் மிகுந்த சிரமங்கள் போராட்டங்கள்  இருக்கின்றன. நமது ஆசையை நிறைவேற்ற வீட்டில் போராட்டம், சமூகத்தில், உறவினர்கள் மத்தியில் இதை எல்லாம் கடந்து வருவதே பெண்களுக்கு பெரிய வெற்றியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடா்ந்து நடிகர் ஆனந்தராஜ், நடிகை சம்யுக்தா கூறியது போன்று கல்லூரி காலத்தில் மிக பெரிய பிரச்சினையாக இருபது காதல் என கூறினார். அப்படி வாழ்க்கையில்  காதல் என்ற ஒன்று எனக்கு நடந்ததே இல்லை என நகைச்சுவை வெளிப்படுத்தினார். நான் முதன் முதலாக கதாநாயகனாக நடிக்கும் போது அப்பொழுது முதலில் இசையமைப்பாளர் தேவாவை ஒப்பந்தம் செய்துவிட்டு பின்னர் என்னை ஒப்பந்தம் செய்யுங்கள் என கூறினேன். என் ஆஸ்தான இசையமைப்பாளர் தேவா அவர்கள்தான் என பெருமிதம் தெரிவித்த நடிகர் ஆனந்தராஜ், இரண்டாவது இன்னிங்ஸ் கதாநாயகனாக துவங்கி உள்ள எனக்கு அவரது மகன் இசையமைக்கிறார் என்பது பெருமையாக உள்ளது. கல்லூரிக்கு கல்வி கற்கதான் தான் வருகிறோம் கல்விதான் வாழ்க்கையில் மிக முக்கியம் என தெரிவித்தார்.ஹீரோவாக மாறிய வில்லன்!! பட பிரமோஷனில் குத்தாட்டம் போட்ட நடிகா்…இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆனந்தராஜ்,

இப்பொழுது வரும் படங்களில் என்ன கருத்து உள்ளது என கேள்வி எழுப்பியவர், மதராஸ் மாஃபியா கம்பெனி திரைப்படம் மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதை வைத்து நல்ல கருத்துடன் படம் வெளியாக உள்ளது. என்னுடன் திரைப்படம் செய்த ஹீரோக்கள் சத்யராஜ், சரத்குமார், அர்ஜுன் ஏன் அரவிந்த்சாமி கூட வில்லனாக நடித்து விட்டார். வில்லனாக நடித்த நான் கதைக்கு ஏற்றார் போல  ஹீரோவா மாறிவிட்டேன் என கூறினார். அனைவரும் பியூர் வில்லனாக மாறிவிட்டார்கள் நான் காமெடி கலந்த வில்லனாக மாறி இருக்கிறேன். ஜெயிலர் 2வில் நடிக்கவில்லை. சுந்தர் சி இயக்கும் நடிகர் ரஜினி நடிக்கும் புதிய திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன், wait and see என கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சம்யுக்தா

இந்த படமா அனைத்து விதமான கதை காலத்தையும் கொண்டது. அனைவருக்கும் பிடிக்கும் வகையான திரைப்படமாக அமையும் என தெரிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு பிக்பாஸ் நான் பார்ப்பதே இல்லை என பதில் அளித்தார்.

நடிகை எடை குறித்து கேள்வி எழுப்பி சர்ச்சையான நிலையில், அதுகுறித்து பதில் அளிக்கையில் அது முடிந்து போன விஷயம் இருந்த போதிலும் ஒருவருக்கு அந்த விஷயத்தில் சென்சிடிவாக இருந்தால் மேலும் மேலும் கேள்வி எழுப்பி இருக்க கூடாது நடிகை கௌரி அவர்கள் நல்ல விதத்தில் அந்த பிரச்சினையை கையாண்டார் என அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

எனக்கும் அந்த பிரச்சனை இருக்கிறது…. பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஓபன் டாக்!

MUST READ