spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஉணவில் புழு , பூச்சிகள்..!! ஆவடியில் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்..

உணவில் புழு , பூச்சிகள்..!! ஆவடியில் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்..

-

- Advertisement -
ஆவடி - வேல்டெக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஆவடியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வெள்ளானுார் பகுதியில் பிரபல தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, நர்சிங் , கல்வியியல் கல்லூரி என அந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்காக தனித்தனியே 8 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள 8 விடுதிகளில், தலா 2000 என 15,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாகவும், உணவுகளில் புழு, பூச்சிகள் உள்ளிட்டவை கிடப்பதாகவும் மாணவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்துள்ளனர். இதனை கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

we-r-hiring

வேல்டெக் கல்லூரி விடுதிமாணவர்கள் போராட்டம்இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர், விடுதி அருகே சாலையில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதிக்காக ஆண்டுதோறும் ஒரு மாணவருக்கு 1.50 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் போதும் , சில நேரம் உணவில், புழுக்கள் , கரப்பான் பூச்சி உள்ளிட்டவை செத்து கிடப்பதாகவும், போராட்டம் நடந்த பின் சில நாட்கள் மட்டும் உணவு தரமானதாக வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். தகவலறிந்து  நிகழ்விடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் மீண்டும் விடுதி உள்ளே சென்று கல்லுாரி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தி ஈடுபட்டனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ