spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடியில் அண்ணா சிலை மீண்டும் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஆவடியில் அண்ணா சிலை மீண்டும் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

-

- Advertisement -

ஆவடியின் முகமாக இருந்த பேரறிஞர் அண்ணா சிலை மீண்டும் திறப்பு. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆவடியில் அண்ணா சிலை மீண்டும் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்அண்ணா வின் சிலை 2014 ஆம் ஆண்டு மே மாதம் லாரி விபத்தில் உடைந்து விட்டது. 44 ஆண்டுகள் ஆவடியின் முகமாக இருந்த அண்ணா சிலை 11 ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

we-r-hiring

தமிழ்நாட்டில் திமுக முதன் முதலில் 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது.1969ல் பேரறிஞர் அண்ணா மறைந்து விட்டார். நாடு முழுவதும் துயரத்தில் மூழ்கியது. ஆவடி பாதுகாப்பு துறையில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து 1970 ம் ஆண்டு ஆவடி பேருந்து நிலையம் அருகில் அறிஞர் அண்ணாவிற்கு சிலை நிறுவினார்கள்.அந்த சிலையை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணநிதி அவர்கள் திறந்து வைத்தார்.

அண்ணாவின் சிலை 44 ஆண்டுகள் ஆவடியின் அடையாளமாகவும், முகமாகவும் ஆவடி மக்களின் வாழ்வில் ஒன்றாக கலந்து இருந்தது அண்ணாவின் சிலை. அந்த சிலை 2014 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு வாகன விபத்தில் உடைந்து விட்டது. 11 ஆண்டுக்குப் பிறகு பேரறிஞர் அண்ணா சிலை புது பொலிவுடன் புனரமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

ஆவடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் சா.மு. நாசர்  ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிகளைச் செயல்படுத்துவதில் அவர் காட்டிய அக்கறை போற்றுதலுக்குரியது.

MUST READ