spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்நூல் விலை உயர்வை கண்டித்து 50% உற்பத்தி நிறுத்தம் – ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

நூல் விலை உயர்வை கண்டித்து 50% உற்பத்தி நிறுத்தம் – ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

-

- Advertisement -

நூல் விலை உயர்வை கண்டித்து நாளை முதல் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் 50%  உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.நூல் விலை உயர்வை கண்டித்து 50% உற்பத்தி நிறுத்தம் – ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்புநூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை முதல் 50%  உற்பத்தி நிறுத்த போரட்டத்தில் ஈடுபடுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளாா். கடந்த 3 வாரங்களாக நூல் விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளதாகவும், இதனால் உற்பத்தி செலவு பெரிதும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தாா்.

we-r-hiring

தினமும் ஒரு கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படும் நிலையில், நாளை முதல் அந்த உற்பத்தி பாதியாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.100 கோடி மதிப்புள்ள துணிகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளதாகவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை சாப்பிடப் போகிறது – அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை

MUST READ