Homeசெய்திகள்தமிழ்நாடுகாணாமல் போன செல்போனைக் கண்டுபிடிக்க 'வாட்ஸ் அப்' எண்ணை அறிவித்தது வேலூர் காவல்துறை!

காணாமல் போன செல்போனைக் கண்டுபிடிக்க ‘வாட்ஸ் அப்’ எண்ணை அறிவித்தது வேலூர் காவல்துறை!

-

- Advertisement -

 

காணாமல் போன செல்போனைக் கண்டுபிடிக்க 'வாட்ஸ் அப்' எண்ணை அறிவித்தது வேலூர் காவல்துறை!
File Photo

காணாமல் போன செல்போன்களைக் கண்டுபிடிக்க வேலூர் மாவட்டக் காவல்துறை, ‘செல் டிராக்கர்’ (Cell Tracker) என்றழைக்கப்படும் புதிய வாட்ஸ் அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு!

94862- 14166 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு ‘ஹாய்’ என்று மெசேஜ் அனுப்பி, தொலைந்துப் போன ஐ.எம்.இ.ஐ. எண்ணையும், செல்போனின் உரிமையாளரின் விவரங்களையும் அனுப்பினால், வேலூர் மாவட்ட சைபர் பிரிவு செல்போனை டிராக் செய்துக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

இதன்மூலம், செல்போனைத் தொலைத்தவர்கள் காவல் நிலையம் சென்று புகார் அளிக்கத் தேவையில்லை; உடனடியாக செல்போனை கண்டுபிடிக்க இந்த திட்டம் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ