Homeசெய்திகள்தமிழ்நாடுசட்லஜ் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு

சட்லஜ் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு

-

இமாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் சட்லஜ் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி கடந்த 4ம் தேதி விபத்தில் சிக்கினார். வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, கஷாங் நாளா பகுதியில் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை தேடும் பணியில் இமாச்சலப்பிரதேசம் மாநில காவல்துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தேடும் பணி நடைபெற்று வந்தது. கார் விபத்தில் மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என அவரது தந்தை சைதை துரைசாமி அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் சட்லஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது. ஏற்கனவே கார் ஓட்டுநர் இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில், காரில் பயணித்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

MUST READ