

மறைந்த தனது கணவர் விஜயகாந்தின் உருவத்தை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பச்சைக் குத்திக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘கார் விபத்து’- சைதை துரைசாமி மகனின் நிலை என்ன?
கடந்த 2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் தே.மு.தி.க.வின் நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் நினைவிடத்தில் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
அண்ணாமலை உள்பட 12 பேர் மீது பாய்ந்த வழக்கு!
இந்த நிலையில், விஜயகாந்த் சிரித்தபடி இருக்கும் உருவத்தை தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளரும், அவரது மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த், மகிழ்ச்சியாக கையில் பச்சைக் குத்திக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


