Homeசெய்திகள்தமிழ்நாடுவிளவங்கோட்டில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

விளவங்கோட்டில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

-

- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நேற்று (07.04.2024) – கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் டாக்டர் தாரகை கட்பர்ட் அவர்களுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு.விஜய் வசந்த் அவர்களுக்கும் பரப்புரையாற்றி வாக்கு சேகரித்தார்கள்.

இந்நிகழ்ச்சியினை கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் வி.எம்.பினுலால் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் ஸ்ரீவல்ல பிரசாத், மாண்புமிகு பால்வளத்துறைஅமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் திரு.எஸ்.எஸ்.ராமசுப்பு EX.M.P.,குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜே.ஜி.பிரின்ஸ் அவர்கள், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ராஜேஷ்குமார் அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியின் மூத்தத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.

 

MUST READ