Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள ரூ.1 கோடி போஸ்டர்

ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள ரூ.1 கோடி போஸ்டர்

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்து தண்டனை பெற்றுத் தரும், நேர்மையான அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தபடும் என தனி ஒரு மனிதர் தேர்தல் ஆணையத்திற்கு சவால் விடும் வகையில் கரூரில் ஒட்டப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போஸ்டர்

we-r-hiring

கரூர் செங்குந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் கண்ணன். இவர் கரூர் மாநகராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம் வீடு வீடாக சென்று வெற்றிலை பாக்கு வைத்தும், நூதன முறையில் பல்வேறு உறுதி மொழி அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்தவர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாக்குக்காக அரசியல் கட்சிகள் சார்பில் போட்டி போட்டுக் கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு பரிசு பொருள்கள், பணம் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இதை தடுக்க வேண்டிய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்படுகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

கரூரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர் கரூர் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டியுள்ளார். அதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்து தண்டனை பெற்று தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிக்கு ஒரு கோடி பரிசு மற்றும் பாராட்டு விழாவும், 25.02.2023 இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் என சுவரொட்டி விளம்பரம் செய்து தேர்தல் ஆணையத்திற்கு சவால் விடும் வகையில் அறிவிப்பு செய்துள்ளார்.

MUST READ