Homeசெய்திகள்தமிழ்நாடுநாம் அளிப்பது சாதாரண வாக்கல்ல; எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டது – வாக்களித்த கையோடு மு.க.ஸ்டாலின்...

நாம் அளிப்பது சாதாரண வாக்கல்ல; எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டது – வாக்களித்த கையோடு மு.க.ஸ்டாலின் சொன்ன மெசேஜ்

-

- Advertisement -

வாக்களித்த பின் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின், “உங்கள் வாக்கு தமிழ்நாட்டைக் காக்கும் கேடயம்; ” ஒவ்வொரு வாக்கும் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டது.” என கூறியுள்ளாா்.நாம் அளிப்பது சாதாரண வாக்கல்ல; எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டது – வாக்களித்த கையோடு மு.க.ஸ்டாலின் சொன்ன மெசேஜ்

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 23, 2026) நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, மாநிலத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தருணமாக மாறியுள்ளது. காலை 7 மணிக்கே தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் உற்சாகமாக பங்கேற்று வருகின்றனர்.

we-r-hiring

234 தொகுதிகளிலும் அமைதியான சூழலில் தேர்தல் நடைபெற பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணி வரை வாக்களிக்க நேரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்ச வாக்குப்பதிவை எட்ட தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் மே 4, 2026 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய நாளாக இந்நாள் கருதப்படுகிறது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஜனநாயகக் கடமையை இன்று நிறைவேற்றினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி (SIET) கல்லூரி வாக்குச்சாவடியில், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் அவர் வாக்களித்தார். பொதுமக்களுடன் இணைந்து வரிசையில் நின்று வாக்களித்தது கவனம் பெற்றது.

வாக்களித்த பிறகு, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான ”எக்ஸ்” தளத்தில் அவர் பகிர்ந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த பதிவில், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இன்று நாம் அளிப்பது சாதாரண வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்கும் கேடயம். ஒவ்வொரு வாக்கும் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், சமத்துவம், சமூகநீதி போன்ற அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை பாதுகாக்கும் வகையில் உங்கள் வாக்கு அமையட்டும். தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்!” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக மக்கள் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

MUST READ