Homeசெய்திகள்தமிழ்நாடு"யாரை ஏமாத்த இந்த வேலை?" - லஞ்ச ஒழிப்புத் துறையை விளாசித் தள்ளிய உயர்நீதிமன்ற மதுரைக்...

“யாரை ஏமாத்த இந்த வேலை?” – லஞ்ச ஒழிப்புத் துறையை விளாசித் தள்ளிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

-

- Advertisement -

“லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வாட்ஸ்அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம். நீங்கள் யாரை ஏமாற்றுவதற்காக இந்த வேலையைச் செய்கிறீர்கள் எனத் தெரியவில்லை” என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது."யாரை ஏமாத்த இந்த வேலை?" - லஞ்ச ஒழிப்புத் துறையை விளாசித் தள்ளிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி ராஜா ராம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்துத் தனது கடுமையான அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினார்.

we-r-hiring

நீதிபதி சரமாரி கேள்வி
விசாரணையின் போது லஞ்ச ஒழிப்புத்துறையைக் கடுமையாக விமர்சித்த நீதிபதி தெரிவித்ததாவது, “நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. நீதிமன்ற உத்தரவுக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்கள் வாட்ஸ்அப்பில் புகார் அனுப்பினால் மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுவீர்களா?”  என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது. மேலும், லஞ்சம் வாங்குவதைத் தடுப்பதாகக் கூறி வாட்ஸ்அப் எண்களை விளம்பரப்படுத்துவது பொதுமக்களை ஏமாற்றும் வேலை என்றும், இதுபோன்ற போலி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதி காட்டமாகக் குறிப்பிட்டார்.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த மெத்தனப்போக்கு குறித்துத் தனது ஆழந்த கண்டனத்தைப் பதிவு செய்து விசாரணையை ஒத்திவைத்தது. இச்சம்பவம் காவல்துறை மற்றும் அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி மறுவரையறை கூட்டத்தில் சிபிஐ எம்.பி.க்கள் பங்கேற்பு: டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் பேட்டி!

MUST READ