Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் -  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் –  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

-

- Advertisement -

மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த சட்ட மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் -  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

we-r-hiring

மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த சட்ட மசோதாக்கள் வாக்கெடுப்பு தாமதமாகும் என தெரிவித்துள்ளது. முன்னதாக, இம்மசோதாக்கள் குறித்த விவாதம் முடிவடைந்ததும் பிற்பகல் 4 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட மாற்றத்தினால் வாக்கெடுப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி, மாலை 6 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாக்கள் தொடர்பாக உரையாற்ற உள்ளார். அவரது உரைக்கு பிறகே வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம், மசோதாக்கள் குறித்து இறுதி நிலைப்பாடுகளை விளக்குவதற்கான முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால், மக்களவையில் அரசியல் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

MUST READ