Homeசெய்திகள்வானிலைதமிழகத்தில் தொடரும் மழை! இன்று, நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

தமிழகத்தில் தொடரும் மழை! இன்று, நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

-

- Advertisement -

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள நிலையில், தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

இன்று (அக்டோபர் 7) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோர பகுதிகள், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மிதமான மழை

தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளையும் கனமழை தொடரும்

அக்டோபர் 8-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரில் எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

தொடரும் மழை வாய்ப்பு

அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு தொடர்கிறது.

MUST READ