Homeசெய்திகள்உலகம்சீனாவில் பயங்கரம்: துறைமுகத்தில் நின்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து - 25 பேர் பரிதாப...

சீனாவில் பயங்கரம்: துறைமுகத்தில் நின்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து – 25 பேர் பரிதாப பலி!

-

- Advertisement -

சீனாவின் முக்கியக் கப்பல் போக்குவரத்து மையமான கிங்டாவோ (Qingdao) துறைமுகத்தில் நின்றிருந்த சரக்குக் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

பராமரிப்புப் பணியின் போது நேர்ந்த விபத்து: லைபீரியக் கொடியுடன் பயணிக்கும் ‘ஓஷன் மெலடி’ (Ocean Melody) என்ற சரக்குக் கப்பல், வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காகக் கிங்டாவோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இந்தக் கப்பலில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ விபத்து நிகழ்ந்த சமயத்தில் கப்பலுக்குள் மொத்தம் 42 பேர் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

25 உடல்கள் மீட்பு – 5 பேர் படுகாயம்: தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடிபாடுகள் மற்றும் கப்பலின் உட்பகுதியிலிருந்து இதுவரை 25 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகச் சீன அரசு ஊடகமான ‘சின்ஹுவா’ (Xinhua) உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், கப்பலில் இருந்த 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் பலத்த தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணை தீவிரப்படுத்தல்: கப்பலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தீப் பற்றியதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்துச் சீனத் துறைமுக அதிகாரிகளும் தீயணைப்புத் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்! எண்ணெய் விலை $108-ஐ எட்டியது – உலக நாடுகளுக்கு புதிய கவலை

MUST READ