Homeசெய்திகள்உலகம்2030-க்குள் மனிதகுலத்தையே அழிக்கும் அபாயம்": ஏஐ சூப்பர் இண்டெலிஜென்ஸ் குறித்து பிரபல ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்சன்...

2030-க்குள் மனிதகுலத்தையே அழிக்கும் அபாயம்”: ஏஐ சூப்பர் இண்டெலிஜென்ஸ் குறித்து பிரபல ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்சன் அதிர்ச்சி எச்சரிக்கை!

-

- Advertisement -

சான் பிரான்சிஸ்கோ:
செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள் அதிவேகமாக உருவாக்கி வரும் ‘சூப்பர் இண்டெலிஜென்ஸ்’ (Superintelligence) தொழில்நுட்பமானது, வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் மனிதகுலத்தையே அழித்துவிடும் அபாயம் இருப்பதாக பிரபல ஏஐ ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்சன் (Jacob Coxon) மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.2030-க்குள் மனிதகுலத்தையே அழிக்கும் அபாயம்": ஏஐ சூப்பர் இண்டெலிஜென்ஸ் குறித்து பிரபல ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்சன் அதிர்ச்சி எச்சரிக்கை!

ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து ராஜினாமா:
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் ஒன்றான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வந்த ஜேக்கப் காக்சன், அந்நிறுவனங்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளைக் கண்டித்துத் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

we-r-hiring

கடந்த மூன்று ஆண்டுகளாக OpenAI மற்றும் Anthropic ஆகிய இரு முக்கிய நிறுவனங்களிலும் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தனது ராஜினாமா குறித்துத் தெரிவித்துள்ளதாவது:

நான் ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இருந்து எனது பணியை ராஜினாமா செய்துள்ளேன்.

இந்த ஏஐ நிறுவனங்கள் எவ்வித பொறுப்புணர்வும் இன்றிச் செயல்பட்டு வருகின்றன. மனிதனின் கட்டுப்பாட்டை மீறி, தன்னைத்தானே சுயசார்புடன் மேம்படுத்திக்கொள்ளும் ‘சூப்பர் இண்டெலிஜென்ஸ்’ தொழில்நுட்பத்தை நோக்கி இவர்கள் மிக வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உயிருடன் விளையாடுவதற்குச் சமமாகும்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

“ஆராய்ச்சியாளர்களின் போலித்தனமும் உண்மையான பயமும்”:
தொடர்ந்து பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனித சமூகத்தையே அழித்துவிடும் என்பதை இந்தத் துறையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஆழமாக நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏஐ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள் பொதுவெளியிலும் ஊடகங்களிலும் பேசும்போது தங்களது புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் அறிவுப்பூர்வமான முன்னேற்றங்கள் குறித்தும் பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால், தனிப்பட்ட உரையாடல்களில் அவர்கள் அனைவரும் இதன் ஆபத்தை எண்ணி மிகுந்த பயத்தினை வெளிப்படுத்துகின்றனர். எனவே, அடுத்த சில ஆண்டுகள் உண்மையில் எப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆராய்ச்சியாளர் இவான் ஹீபிங்கர் ஆதரவு:
ஜேக்கப் காக்சனின் இந்த எச்சரிக்கையை அதே ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மற்றொரு முன்னணி ஆராய்ச்சியாளரான இவான் ஹீபிங்கர் (Evan Hubinger) முழுமையாக ஆமோதித்துள்ளார்.

மேலும் இதுகுறித்துப் பேசிய அவர், “செயற்கை நுண்ணறிவானது முழுமையாக மனிதனின் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே இயங்குவதை உறுதி செய்வதற்கான முறையான பாதுகாப்புத் தீர்வுகள் இதுவரை கண்டறியப்படவில்லை” என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏஐ தொழில்நுட்பப் போட்டியின் காரணமாகப் பாதுகாப்பு விதிகளைப் புறக்கணித்துவிட்டு நிறுவனங்கள் ஓடுவது, எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத ஆபத்தாக முடியும் என்ற இவர்களின் எச்சரிக்கை உலகளாவிய தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் வான்வழி கட்டுப்பாட்டு மையத்தில் தொழில் நுட்பக் கோளாறு: 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து — பயணிகள் கடும் அவதி!

MUST READ