Homeசெய்திகள்உலகம்"கூடுதல் பணத்தை நான் தொடமாட்டேன்!" - ஊதிய உயர்வு தொகையை அறக்கட்டளைக்குத் தூக்கிக் கொடுத்த பிரதமர்!

“கூடுதல் பணத்தை நான் தொடமாட்டேன்!” – ஊதிய உயர்வு தொகையை அறக்கட்டளைக்குத் தூக்கிக் கொடுத்த பிரதமர்!

-

- Advertisement -

உலகிலேயே அதிகப்படியான சம்பளம் வாங்கும் தலைவரான சிங்கப்பூர் பிரதமரின் ஆண்டு ஊதியம் 64 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு சுமார் 27 கோடி ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில், உயர்வால் கிடைக்கும் கூடுதல் தொகையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நற்பணி மற்றும் சமூக அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) அறிவித்துள்ளார்."கூடுதல் பணத்தை நான் தொடமாட்டேன்!" - ஊதிய உயர்வு தொகையை அறக்கட்டளைக்குத் தூக்கிக் கொடுத்த பிரதமர்!

கடந்த 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு (சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்) சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் பிரதமரின் ஊதியக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றமும் மறுசீரைப்பும் செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

சம்பள உயர்வு விவரங்கள்
அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி:

  • பிரதமர் ஊதியம்: 2.2 மில்லியனாக இருந்த பிரதமரின் ஆண்டு ஊதியம் 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ₹27 கோடி) உயர்த்தப்பட்டுள்ளது.

  • துணைப் பிரதமர் ஊதியம்: துணைப் பிரதமரின் ஆண்டு ஊதியம் ₹14.02 கோடியில் (S$1.8M) இருந்து ₹22.94 கோடியாக (S$3M) அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • அமைச்சர்கள் ஊதியம்: இதர அமைச்சர்களின் அடிப்படை ஊதியம் 1.1 மில்லியன் சிங்கப்பூர் டாலரில் இருந்து 1.8 மில்லியன் சிங்கப்பூர் டாலராக மாற்றப்பட்டுள்ளது. இவர்களின் பதவி மூப்பு மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப ஆண்டு ஊதியம் ₹13.5 கோடி முதல் ₹21.59 கோடி வரை உயரும்.

அரசு அளிக்கும் விளக்கம்
அரசியலில் திறமையான உயர் அதிகாரிகளையும் தொழில்முறை வல்லுநர்களையும் ஈர்ப்பதற்கும், அரசாங்கத்தில் ஊழலை முற்றிலும் ஒழித்து நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காகவுமே அரசியல்வாதிகளுக்கு இத்தகைய அதிகப்படியான ஊதியம் வழங்கப்படுவதாகச் சிங்கப்பூர் அரசு விளக்கம் அளித்துள்ளது.

மக்களின் அதிருப்தியும் பிரதமரின் நற்செயலும்
இருப்பினும், சாமானிய மக்களின் வருமானத்தை விடப் பல நூறு மடங்கு அதிகமாக அரசியல்வாதிகளின் சம்பளம் உயர்த்தப்பட்டிருப்பது சிங்கப்பூர் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், “அரசியல்வாதிகளின் ஊதியம் என்பது உணர்வுபூர்வமான விஷயம் என்பதை நான் அறிவேன். எனவே, இந்த ஊதிய உயர்வின் மூலம் எனக்குக் கிடைக்கக்கூடிய கூடுதல் தொகையை (வருடத்திற்குச் சுமார் S$1.4 மில்லியன்) அடுத்த 5 ஆண்டுகளுக்குச் சமூக நலக் காரியங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு முழுமையாக நன்கொடையாக வழங்கவுள்ளேன்” என்று அறிவித்துள்ளார். பிரதமரின் இந்த அதிரடி முடிவு சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாகிஸ்தானில் ஆப்கான் மாணவர்கள் மருத்துவம் பயில தடை: படித்து வரும் மாணவர்களும் வெளியேற அதிரடி உத்தரவு!

MUST READ