Homeசெய்திகள்உலகம்சீனாவில் கல்லூரி மாணவர்கள் காதலிக்க ஒரு வாரம் விடுமுறை

சீனாவில் கல்லூரி மாணவர்கள் காதலிக்க ஒரு வாரம் விடுமுறை

-

- Advertisement -

சீனாவில் கல்லூரி மாணவர்கள் காதலிக்க ஒரு வாரம் விடுமுறை

சீனாவில் கல்லூரி மாணவர்கள் காதலிப்பதற்காக, ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சின் கல்லூரி மாணவர்களுக்கு காதலில் விழுவதற்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, குறையும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில், சீனக் கல்லூரிகள் மாணவர்களுக்கு 'காதலில் விழுவதற்கு' 7 நாள் இடைவெளியை வழங்குகின்றன பிறப்பு விகிதம் வீழ்ச்சி: அறிக்கை

இதுதொடர்பாக சீனாவின் Mianyang Flying Vocational College வெளியிட்டுள்ள அறிக்கையில், “வசந்த கால இடைவெளி மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்வதற்கும், இயற்கையை அனுபவிக்கவும் உகந்த சூழல். அப்போது மாணவர்கள் இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், காதலை அனுபவிக்கவும் கற்றுக்கொள்ளமுடியும். எனவே காதலிக்க ஏப்ரல் 1 முதல் 7 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது. இதேபோல் சீனாவில் தற்போது 9 கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ளன.

மாணவர்களுக்கு நாட்குறிப்பு எழுதுதல், தனிப்பட்ட வளர்ச்சியைப் பதிவு செய்தல் மற்றும் அவர்களின் பயணங்களின் வீடியோக்களை படம்பிடித்தல் போன்ற வீட்டுப்பாடங்களும் வழங்கப்பட்டுள்ளன.

1980 மற்றும் 2015 க்கு இடையில் விதிக்கப்பட்ட ஒரு குழந்தை கொள்கையால், சீனாவில் மக்கள்தொகை கணிசமாக குறைந்துவருகிறது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ